புதிய அரசு அமையும்போது வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்-மம்தா பானர்ஜி

19 hours ago 3

கொல்கத்தா,

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜனதா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.   

Read Entire Article