ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ், சிட்சிபாஸ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

3 months ago 20

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஜப்பானின் யோசுகே வாடனுகி உடன் மோதினார்.

இந்த ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் யோசுகே வாடனுகியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீக்), பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் உடன் மோதினார்.

இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Read Entire Article