ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

3 months ago 20

இஸ்லாமாபாத்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். அதேசமயம் வர்த்தகம், ராணுவத்தை பலப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மாநாடு அதன் உறுப்பு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு பாகிஸ்தான் தலைமையேற்கிறது. இன்று, நாளையும் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ராவல்பிண்டி விமான நிலையம் வந்தடைந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வழங்கும் விருந்தில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

#WATCH | EAM Dr S Jaishankar arrives in Rawalpindi, Pakistan for the 23rd Meeting of SCO Council of Heads of Government.

(Source: PTV) pic.twitter.com/BMIxwWWINk

— ANI (@ANI) October 15, 2024

Read Entire Article