
சென்னை,
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் கியாரா அத்வானி. அயன்முகர்ஜி இயக்கில் உருவாகி உள்ள வார்-2 படத்தில் ஹிருதிக்ரோஷன், ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கிறார். ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியானது.
டீசரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த கியாரா அத்வானி. இப்படத்தின் மூலம் எனக்கு முதன்முறையாக நடந்த பல விஷயங்கள் உண்டு. முதல் அதிரடி படத்திலும் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி,ஆருடன் முதன் முறையாக நடித்தது. அயன்முகர்ஜி இயக்கத்தில் முதன் முறையாக பணியாற்றியது.
மேலும் முதல் முறையாக பிகினி உடையில் நடித்தது என பதிவிட்டுள்ளார். டீசரில் இதுவரை இல்லாத அளவிற்கு கியாரா அத்வானி பிகினி உடையில் கவர்ச்சியாக தோற்றமளித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. கியாரா அத்வானி பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள் ஷங்கர் பட நடிகை இப்படியா? என வாயடைத்து போயுள்ளனர். கியாரா அத்வானி டீசரில் வரும் காட்சிகள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.