![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38201367-jac.webp)
சென்னை,
கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வைஷ்ணவி சைதன்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி, இவர் தற்போது நடித்து வரும் படம் 'ஜாக்'. சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தை பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்க பொம்மரில்லு பாஸ்கர் இயக்குகிறார். இந்நிலையில், நேற்று நடிகர் சித்து ஜொன்னலகட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.