வையம்பட்டி பகுதியில் முறைகேடாக பயன்படுத்திய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.63,482 அபராதம்

3 months ago 21

 

துவரங்குறிச்சி, அக்.5: வையம்பட்டி பகுதியில் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.63,482 அபராதம் விதிப்பு. திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் செயற்பொறியாளர் தியாகராஜன் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் ஆகியோர் வையம்பட்டி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட 1,272 மின் இணைப்புகள் ஆய்வு செய்தனர்.

அதில், மின்சாரம் முறைகேடாக பயன்படுத்திய 9 இணைப்புகள் கண்டறியப்பட்டன. அவற்றிற்கு, 63 ஆயிரத்து 482 ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர், இனிவரும் காலங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அபராதத்தை தவிர்க்கும் பொருட்டு மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

The post வையம்பட்டி பகுதியில் முறைகேடாக பயன்படுத்திய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.63,482 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article