வேளாண் வணிக துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ₹ 5 லட்சம் மானியம்: கலெக்டர் வழங்கினார்

3 weeks ago 6

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி நடத்தினார். இதில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் கூட்டு பண்ணைய திட்டத்தில் குன்றத்தூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் குன்றத்தூர் பகுதி விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை அவர்களே விற்பனை செய்யவும் அவர்களுக்கு தேவையான இடுபொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ளவும் பொருட்களை மதிப்பு கூட்டி நல்ல விலைக்கு விற்கவும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிறுவனம் படப்பையினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மரச்செக்கு எண்ணெய்கள், பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள் போன்றவை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தொடக்கநிலை மூலதன நிதி ₹5லட்சத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் அரசு மானியமாக காசோலை வழங்கினார்.

இந்த நிகழ்வில், உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் மற்றும் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை துணை இயக்குனர் ஜீவராணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இருந்தனர்.

The post வேளாண் வணிக துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ₹ 5 லட்சம் மானியம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article