வேளாண் பணிகள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு

4 weeks ago 7

 

மதுரை, டிச. 21:மதுரை மாவட்டத்தின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் திட்டப்பணிகள் குறித்து, வேளாண் இணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அமுதன் ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று அவர் சொக்கிக்குளத்தில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்ட்டார். அப்போது, உழவர் சந்தை வளாகத்தில் உள்ள கடைகளையும், உழவன் அங்காடியையும், குளிர் பதன கிடங்கையும் நல்ல முறையில் இயக்கிடவும், காய்களின் வரத்தினை அதிகரித்திடவும் வேண்டும் என்று துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், உழவர் சந்தை அடையாள அட்டை வழங்குவதற்கான தகுதிகளை கேட்டறிந்தார். பின்னர் கே.கே.நகரில் உள்ள அக்மார்க் ஆய்வகம் மற்றும் வாடிப்பட்டியில் நடைபெற்ற கொப்பரை தேங்காய் மற்றும் மட்டை தேங்காய் ஏலத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர்கள் மெர்ஸி ஜெயராணி, அம்சவேணி, மதுரை விற்பனைக்குழு செயலாளர், வேளாண் அலுவலர்கள், வேளாண்விற்பனை வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post வேளாண் பணிகள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article