பணியிடங்கள் விவரம்:
1. உதவி பேராசிரியர் (சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட்) : 41 இடங்கள். சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது : 21 முதல் 35க்குள்.
2. சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்: 83 இடங்கள். சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது: 21 முதல் 35க்குள்
3. அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் சயின்டிஸ்ட் (ஏஆர்எஸ்): 458 இடங்கள். சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400. வயது: 21 முதல் 32க்குள்.
வயது வரம்பு 01.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். ஏஎஸ்ஆர்பி- நெட் தேர்வு எழுதி கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: அக்ரிகல்ச்சர் பயோ டெக்னாலஜி/ அக்ரிகல்ச்சுரல் என்டோமோலஜி/அக்ரிகல்ச்சுரல் மைக்ரோபயாலஜி/ பிளான்ட் பயோ கெமிஸ்ட்ரி/பிளோரிகல்ச்சர்/புரூட் சயின்ஸ்/அனிமல் பிசியாலஜி/டெய்ரி கெமிஸ்டிரி/டெய்ரி மைக்ரோ பயாலஜி/ டெய்ரி டெக்னாலஜி/லைவ்ஸ்டாக் புரடக்ஷன் மேனேஜ்மென்ட்/ேபால்ட்ரி சயின்ஸ்/வெட்னரி மெடிசின்/வெட்னரி மைக்ரோ பயாலஜி/ வெட்னரி பார்மகோலஜி/அக்குவாகல்ச்சர்/ பிஷ் புராசசிங் டெக்னாலஜி/ அக்ரோ பாரஸ்ட்ரி/ அக்ரோனோமி/சாயில் சயின்ஸ்/ என்விரோன்மென்டல் சயின்ஸ்/ அக்ரிகல்ச்சர் எக்னாமிக்ஸ்/ ஹோம் சயின்சஸ்
ஆன்லைனில் நடத்தப்படும் ஏஎஸ்ஆர்பி- நெட் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஏஎஸ்ஆர்பி நெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல்நிலை தேர்வு (Preliminary Examination, Main Examination) என இரு பிரிவுகளாக நடைபெறும். முதல் நிலை தேர்வு செப்-2 முதல் 4ம் தேதி வரை நடைபெறும். பிரதான தேர்வு டிச.7ம் தேதி நடைபெறும்.
கட்டணம்: பொது- ரூ.1000/-. ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ரூ.500/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.asrb.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2025.
The post வேளாண் கல்லூரிகளில் 582 பேராசிரியர்கள் appeared first on Dinakaran.