நாகப்பட்டினம், ஜன.30: தமிழக முதல்வர் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வேளாங்கண்ணி சிவன்கோயில் அருகில் ரூ.30.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் கட்டடத்தை திறந்து வைத்தார். இதைத்தொடந்து வேளாங்கண்ணி சிவன்கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நாகை மாலி, ஆர்டிஓ அரங்க நாதன், கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ்ஆல்வா எடிசன்,
வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, தாசில்தார் கவிதாஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரியசார்லஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, வருவாய் ஆய்வாளர் பத்மநாதன் ,மண்டல துணை தாசில்தார் வெற்றி செல்வன், பொதுப்பணி துறை பொறியாளர் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர்கள் கந்தசாமி, செந்தில், கவுன்சிலர்கள் முருகேசன், வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post வேளாங்கண்ணியில் புதிய வருவாய் ஆய்வாளர் கட்டிடம் appeared first on Dinakaran.