
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாப ராமபுரத்தில் தூய மிக்கேல் ஆலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு போப் ஆண்டவர் கல்லூரி பேராசிரியர் சகாயராஜ் தலைமையில், திருப்பூண்டி பங்குத்தந்தை பீட்டர் டேமியன் துரைராஜ் முன்னிலையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து தேர் புனிதம் செய்யப்பட்டது. இதையடுத்து வாண வேடிக்கைகள் முழங்க தேர் பவனி நடைபெற்றது. மிக்கேல் ஆண்டவர், அந்தோணியார், செபஸ்தியார், குழந்தை ஏசு மற்றும் ஆரோக்கிய மாதா தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன. இதில் மத பாகுபாடின்றி ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.