சென்னை,
வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்தது ஜெயம் ரவியின் ஜீனி போன்ற பல படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் சுந்தர் சி- நயன்தாரா கூட்டணியில் உருவாக உள்ள "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தையும் வேல்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த படம் என்ன படமாக இருக்கும் என்றும் படத்தின் இயக்குனர் யார்? ஹீரோ யார்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அதன்படி இது தொடர்பான புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தினை பா. விஜய் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.