வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 day ago 2

புதுடெல்லி,

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஊர்வலம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பி பி. வாரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Read Entire Article