வேலைவாய்ப்பு பயிற்சியில் சொதப்பும் ஒன்றிய அரசு: மக்களவையில் திமுக புகார்

1 month ago 5

புதுடெல்லி: வேலைவாய்ப்பு பயிற்சியில் ஒன்றிய அரசு சொதப்புகிறது என்று மக்களவையில் திமுக குற்றம்சாட்டியது.

மக்களவையில், பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு: பேசுகையில், கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக வங்கிகளால் நடத்தப்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொழில்சார்ந்த போதிய அறிவுடன் பயிற்சி அளிப்பதில்லை

மாநிலங்களவையில் கே. ஆர். என். ராஜேஷ்குமார்: அத்தியாவசியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஒன்றிய அரசு மெத்தனமாக இருக்கிறது. நுகர்வோருக்கு பொருட்கள் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளார். பி. வில்சன்: உரங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான நிலைக்குழு பரிந்துரையின்படி மூலப்பொருட்கள் மற்றும் ​​நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் இறக்குமதியை குறைக்கவும் அதே நேரத்தில் தேவையை பூர்த்திசெய்யவும் உள்நாட்டில் உர உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையின் விவரங்கள் வெளியிடவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

கனிமொழி சோமு: தேசிய ஊரக சுகாதார இயக்கம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு போதிய நிதியுதவி அளித்துள்ளதா? இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவர்களை பணியில் அமர்த்த உருவாக்கியுள்ள திட்டங்களின் விவரங்கள் என்ன? என்று கேட்டார்.

கே. ஈஸ்வரசாமி(பொள்ளாச்சி): பிற நாடுகளின் உதவியுடன் இணையத்தில் நடக்கும் சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் மற்றும் பல கணினி சார்ந்த குற்றங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.

The post வேலைவாய்ப்பு பயிற்சியில் சொதப்பும் ஒன்றிய அரசு: மக்களவையில் திமுக புகார் appeared first on Dinakaran.

Read Entire Article