ஏழாயிரம்பண்ணை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: ஒருவர் கைது

2 hours ago 2

 

ஏழாயிரம்பண்ணை. ஜன.12: ஏழாயிரம்பண்ணை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஏழாயிரம்பண்ணை அருகே தூங்காரெட்டியபட்டி பகுதியில் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் செட்டை சோதனை செய்ததில் அதில் திரி வைக்கப்பட்டு மருந்து செலுத்தப்படாமல் வானவெடிக்கை குழாய்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏழாயிரம்பண்ணை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article