வேலைநிறுத்தம் வாபஸ்: 12 நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்!

3 months ago 21

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று 12 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடந்த மாதம் 29-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனையடுத்து இம்மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 30-ம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மீனவர்கள் 17 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்து, அனைவரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read Entire Article