பணியிடங்கள் விவரம்:
மொத்த இடங்கள்: 1036.
a) Post Graduate Teachers of different subjects: 187 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: வணிகவியல்/இந்தி/ அரசியல் அறிவியல்/ உயிரியல்/ வேதியியல்/கணிதம்/பொருளியல்/ ஆங்கிலம்/ புவியியல்/ சமையல்கலை/இயற்பியல்/சமூகவியல்/ உடற்கல்வியியல் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று பி.எட்., படித்திருக்க வேண்டும்.
b) Trained Graduate Teachers of different subjects: 338 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: ஓவியம்/பெயின்டிங்/பைன் ஆர்ட்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
c) Scientific Supervisor: 3 இடங்கள். வயது: 18 முதல் 38க்குள். தகுதி: பிசியாலஜி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
d) Chief Law Assistant: 54 இடங்கள். வயது: 18 முதல் 43க்குள். தகுதி: பிஎல் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
e) Public Prosecutor: 20 இடங்கள். வயது: 18 முதல் 35க்குள். தகுதி: பிஎல்/எல்எல்பி படிப்புடன் 5 வருட வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
f) Physical Training Instructor: (English Medium): 18 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் பி.பிஎட் படித்திருக்க வேண்டும்.
g) Scientific Assistant/Training: 2 இடங்கள். வயது: 18 முதல் 38க்குள். தகுதி: ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
h) Junior Translator (Hindi): 130 இடங்கள். வயது: 18 முதல் 36க்குள். தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
i) Senior Publicity Inspector: 3 இடங்கள். வயது: 18 முதல் 36க்குள். தகுதி: இதழியல் மற்றும் மக்கள் தகவலியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதோடு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
j) Staff & Welfare Inspector: 59 இடங்கள். வயது: 18 முதல் 36க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் தொழிலாளர் நலன்/மனிதவளம்/சமூக நலன்/பர்சனல் மேனேஜ்மென்ட் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ/எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
h) Librarian: 10 இடங்கள். வயது: 18 முதல் 36க்குள். தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
i) Laboratory Assistant/School: 7 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பேத்தாலஜிக்கல்/வேதியியல் லேப் பில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
j) Music Teacher (Female): 3 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: இசை பாடத்தில் பி.ஏ அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் இசைப் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
k) Primary Railway Teacher of different subjects: 188 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: பிளஸ் 2 வுடன் ஆசிரியர் பயிற்சி படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
l) Assistant Teacher (Female) (Junior School): 2 இடங்கள். வயது: 18 முதல் 48க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட்., படிப்பு படித்திருக்க வேண்டும்.
m) Lab Assistant Grade III (Chemist and Metallurgist): 12 இடங்கள். வயது: 18 முதல் 33க்குள். தகுதி: வேதியியல் அல்லது மெட்டாலர்ஜி பாடத்தில் பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் ‘சி டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவை 1.1.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2025.
The post ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள் appeared first on Dinakaran.