திருப்பூர், ஏப்.28: திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் வெங்கடேஷ்வரா நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (30). இவர் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அங்கன்வாடி வேலை தொடர்பாக இன்ஸ்டாகிராமில், அவிநாசி ரோடு பெரியார் காலனியைச் சேர்ந்த திலீப் குமார் (28) என்பவர் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரேணுகாதேவி திலீப் குமாரை வேலை தொடர்பாக அணுகியுள்ளார். அப்போது திலீப் குமார் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரேணுகாதேவி திலீப் குமாரிடம் ரூ.15 ஆயிரம் முன்பணமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக வேலை வாங்கி கொடுக்காததால், திலீப் குமார் மீது ரேணுகாதேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை கைது செய்தனர்.
The post வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.