
வேலூர்,
வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த ஆயிள் தண்டனை கைது முத்துக்குமார், கடந்த 2022 பிப்ரவரி 21 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பிச்சென்றான். அவனை வேலூர் மத்திய சிறை காவலர்கள் மற்றும் பாகாயம் போலீசார் வருட கணக்கில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முத்துக்குமார் சிக்கியுள்ளான். பெங்களூருவில் வைத்து முத்துக்குமாரை தனிப்டை காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.