வேலூர், மே 5: வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருைகக்கான ஏற்பாடுகள் என்ன? என்று 2வது நாளாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளராக சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்ற சுஷாந்த் குமார்கர் நேற்றுமுன்தினம் வேலூர் வந்தார். அவர், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், வசந்த மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் திப்பு மகால், ஐதர் மகால், அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து 2வது நாளாக சென்னை வட்ட கண்காணிப்பாளர் சுஷாந்த் குமார்கர் கோட்டையில் நேற்றும் ஆய்வு செய்தார். அப்போது பழைய முனிசிபல் கோர்ட், தொல்லியல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவகம், அங்குள்ள கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோட்டை கொத்தளம் மதில் சுவர் மீது ஏறும் பாதைகள், சுற்றியுள்ள அகழியை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிரோன் கேமரா பறக்கவிட்டு, கோட்டைக்குள் உள்ள அலுவலகங்கள், கோயில் பகுதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
The post வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஏற்பாடுகள் என்ன? தொல்லியல்துறை கண்காணிப்பாளர் கேட்டறிந்தார் 2வது நாளில் டிரோன்கள் பறக்கவிட்டு ஆய்வு appeared first on Dinakaran.