வேலூர் கலெக்டருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் புகார்

1 week ago 2

வேலூர், பிப்.1: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது கடலைகுளம் மலையடிவார கிராமம். இங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த 19ம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ‘தோளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாவரம் மலையடிவாரம் கடலைக்குளம் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் எங்களது அடிப்படை தேவைக்காக நாங்கள் 3 கி.மீ தூரம் கானாற்றின் வழியாக பயணிக்க வேண்டும். மழைக்காலம் என்றால் கானாற்றில் வெள்ளம் வடியும் வரை நாங்கள் ஊருக்குள் முடங்கி கிடக்க வேண்டும். எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எங்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து தர பல ஆண்டுகளாக கேட்டும் செய்து தரப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு மேற்கண்ட அடிப்படை வசதிகளை செய்து தர உதவ வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை செயலருக்கும், வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமிக்கும் கடந்த 27ம் தேதியன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post வேலூர் கலெக்டருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article