வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் தொடர் மழையினால் நேற்று ₹40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தொடர் மழையினால் நேற்று பொய்கை மாட்டு சந்தைக்கு 50 சதவீதம் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் நேற்று ₹40 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக நேற்று பொய்கை மாட்டு சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்து. நேற்று ₹40 லட்சத்துக்கு விற்பனையானது. மேலும் மாட்டு சந்தை பகுதி முழுவதும் சேறும் சகதியும் மாறியதால் விவசாயி, வியாபாரிகள் அவதிப்பட்டனர்’ என்றனர்.
The post வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் தொடர் மழையால் வரத்து குறைந்து ₹40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.