வேலூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை - அன்புமணி கண்டனம்

7 hours ago 3

வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், அது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article