வேலாயுதம்பாளையம் அருகே தனியார் ஆலையில் தீ தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை

3 hours ago 1

வேலாயுதம்பாளையம், ஏப்.24: கரூர் மாவட்டம், புகளூர் செம்படாபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்துக்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது, தீ விபத்துகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூர் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வடிவேல் தலைமை வகித்தார்.

உதவி மாவட்ட அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சி் மூலம் செயல்விளக்கம் செய்து காட்டினர். மேலும் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு களையும் அதிகாரிகள் எடுத்து கூறினர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே தனியார் ஆலையில் தீ தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Read Entire Article