வேறொரு நபர்களுடன் நெருக்கம்: கள்ளக்காதலியை கல்லால் அடித்துக்கொன்ற மாநகராட்சி டிரைவர்

22 hours ago 2

சென்னை,

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அருள்நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 33) கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், பாக்கியலட்சுமிக்கும் அனகாபுத்தூர் கவுரி அவன்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஞான சித்தன் (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஞானசித்தனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தாம்பரம் மாநகராட்சியில் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

ஞான சித்தன் அடிக்கடி பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமி ஞானசித்தனுடன் பேசி பழகுவதை தவிர்வித்து வந்தார்.மேலும் பாக்கியலட்சுமிக்கு வேறு நபர்களுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை ஞான சித்தன் வன்மையாக கண்டித்தாக கூறப்படுகிறது. தன்னுடன் எப்போதும்போல் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு வழக்கம்போல் ஞானசித்தன் வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் தனி அறையில் மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது பாக்கியலட்சுமி தனது குழந்தைகள் 2 பேரையும் வேறு ஒரு அறையில் தூங்க வைத்து இருந்தார்.

மதுபோதையில் பாக்கியலட்சுமியும் ஞானசித்தனும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது திடீரென இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடன் மட்டும் நெருக்கமாக இருக்கும்படி பாக்கியலட்சுமியிடம் அவர் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாக்கியலட்சுமி இப்படிதான் இருப்பேன் என்று கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஞானசித்தன் மதுபோதையில் அருகில் கிடந்த கல்லால் பாக்கியலட்சுமியின் தலையில் பலமுறை சரமாரியாக அடித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து ஞான சித்தன் சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாக்கிய லட்சுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை மாநகராட்சி ஊழியர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article