வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் காதலர் தினத்தில் மாஜி காதலி மீது ஆசிட் வீச்சு: வாலிபருக்கு வலை

1 week ago 2

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். கல்லூரி படிப்பை முடித்துள்ள இவரும் அதே கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த கணேஷ் (24) என்பவரும் காதலித்துள்ளனர். சில மாதங்கள் வரை இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் அதன்பின்னர் இளம்பெண் கணேஷை தவிர்த்து வந்தாராம். இதனிடையே கடந்த மாதம் இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த கணேஷ், காதலித்து ஏமாற்றிய இளம்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். காதலர் தினமான நேற்று காலை வீட்டருகே உள்ள கடைக்கு சென்ற இளம்பெண்ணை கணேஷ்,இளம்பெண்ணை மடக்கி கத்தியால் சரமாரி குத்தினார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவர் மீது வீசினார். இதில் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டு இளம்பெண் கதறி துடித்தார். அதற்குள் கணேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அந்த இளம்பெண் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் கணேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் காதலர் தினத்தில் மாஜி காதலி மீது ஆசிட் வீச்சு: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article