வேதாரண்யம், மார்ச் 30: நாகை மாவட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து, தகட்டூர் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும் தென்னடார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புவேலன் முன்னிலை வகித்தார்.
100 நாள் வேலைவாய்ப்பு ஊதியம் தராத ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்பு தமிழகம் போராடும் தமிழகம் வெல்லும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரி பாலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பரிமளா வெங்கட், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி வீரமணிகண்டன், ஒன்றிய துணை அமைப்பாளர்கள், அருளரசு, தென்னடார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் வைத்தியநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் பாபு, மதியழகன் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.