வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சியில் முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி

3 months ago 22

வேதாரண்யம்,செப்.29: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தென்னடார் ஊராட்சியில் முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தென்னடார் ஊராட்சியில் முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தென்னடார் ஊராட்சியில் நபார்டு வங்கி நிதியில் 2023-24 திட்டத்தின் கீழ் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் தென்னடார்- மேலக்காடு சாலையில் முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் வேதாரண்யம் தாசில்தார் திலகா, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சியில் முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article