லால்குடி, மே19: புள்ளம்பாடியில் மாபெரும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிகட்டு போட்டியில் 730 காளைகளும் 211 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 8.25 மணிக்கு தொடங்கிய போட்டிக்கு லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார், புள்ளம்பாடி தாசில்தார் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் லோபோ மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பின்னர் போட்டி தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 730 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கதொகைகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் 33 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சை க்கு அனுப்பப்பட்டனர்.
The post புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு 730 காளைகள் சீறிப்பாய்ந்தன appeared first on Dinakaran.