'வேட்டையன்' படம் : நடிகர் ரக்சன் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்

3 months ago 21

சென்னை,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 10-ந் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 33 வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது.

திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரக்சன் இப்படத்தில் ரஜினிகாந்தின் குடும்பத்தில் ஒருவனாக நடித்து இருக்கிறார். படத்தில் சமூக வலைத்தளத்தில் உள்ள நுணுக்கங்களை சிறப்பாக கையாளக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது இன்ஸ்டாகிராம் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'ஒரு ரசிகனாக இருந்த நான், இப்போது உங்கள் குடும்பத்தில் இணைந்துள்ளேன்', நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என படத்தில் நடித்த காட்சிகளில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Read Entire Article