'வேட்டையன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினருக்கு அசைவ விருந்து

3 months ago 19

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் மிகப்பெயரிய வெற்றியை தொடர்ந்து வேட்டையன் படக்குழு படத்திற்கு ஆதரவளித்து இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது. அதில் இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங் அங்கிருந்தவர்களுக்கு தங்களின் கைகளால் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.

The VETTAIYAN ️ team gathers at the thanksgiving meet to express their heartfelt thanks to everyone who supported the film and traveled throughout this journey. ✨ #VettaiyanRunningSuccessfully ️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnanpic.twitter.com/SodW1C9FQ2

— Lyca Productions (@LycaProductions) October 20, 2024
Read Entire Article