'வேட்டையன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

3 months ago 26

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது

இந்நிலையில், வேட்டையன் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது .

Read Entire Article