வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தோல்வி: எல்.முருகன் விமர்சனம்

3 months ago 8

சென்னை: வேங்​கைவயல் விவகாரத்​தில் திமுக அரசு தோல்​வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம், சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடைபெற்​றது.

இதில் மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் பேசி​ய​தாவது: மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்​கள், விவசா​யிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்​தளமாக அமைந்​துள்ளது. கடந்த 10 ஆண்டு​களாக நாடு அனைத்து துறை​களி​லும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் சொல்ல முடியாத துன்​பத்​துக்கு ஆளாகி உள்ளனர்.

Read Entire Article