தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி

4 hours ago 2

மதுரை: மணல் குவாரி உரிமம் தொடர்பாக உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம், தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சாந்தி, பாலாஜி, விஷ்ணுவர்தன், உமா மகேஸ்வரி, பவானி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: திருச்சி தொட்டியம் தாலுகா ஸ்ரீனிவாசநல்லூரில் காவிரி ஆற்றில் 2001 முதல் 2004 வரை மணல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தோம். அடுத்த சில மாதங்களில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. மணல் குவாரிகளை அரசு ஏற்றதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

Read Entire Article