வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

5 hours ago 3

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்கினி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். 

Read Entire Article