வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி:

5 hours ago 2

புதுடெல்லி,

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் அசாம் ரூ.375.60 கோடியையும், மணிப்பூர் ரூ.29.20 கோடியையும், மேகாலயா ரூ.30.40 கோடியையும், மிசோரம் ரூ.22.80 கோடியையும், கேரளா ரூ.153.20 கோடியையும், உத்தரகாண்ட் ரூ.455.60 கோடியையும் மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து மத்திய பங்காகப் பெறுகிறது. இந்த மாநிலங்கள் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது மிக அதிக மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள், ராணுவக்குழுக்கள் மற்றும் விமானப்படை ஆதரவு உள்ளிட்ட அனைத்து தளவாட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 104 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Read Entire Article