ஆனி பௌர்ணமி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை

4 hours ago 2

சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக, சங்கரன்கோவில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாக அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள். பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரங்கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

மேலும் இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி விளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு விளக்கு ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி பக்தியுடன் பூஜை செய்து வழிபட்டனர்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

Read Entire Article