வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

4 hours ago 2

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகமலை அருவிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே அமைந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும் மேகமலை அருவி அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் நேரங்களில் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்படுவது வழக்கம்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதனால் மேகமலை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article