வெள்ளநீர் வெளியேற அகலப்படுத்தப்பட்டு வரும் பள்ளிக்கரணை கால்வாய் கரைகள்

3 months ago 22
சென்னையில் மழை சற்று குறைந்துள்ள நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் தேங்கிய வெள்ள நீர் வெளியேறும் வகையில் சதுப்பு நில கால்வாயின் கரைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. வேளச்சேரி பகுதியில் தேங்கும் மழை நீர் , நாராயணபுரம் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைந்து ஒக்கியம் மதகு வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலக்கும். சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் வெள்ளநீர் ஒக்கியம் மதகை அடையும் வகையில் பள்ளிக்கரணை சதுப்பு நில கால்வாய் கரைகள் அகலப்படுத்தப்படுகின்றன. 
Read Entire Article