வெள்ளத்தைத் தடுக்க 3.5 ஏக்கா் பரப்பளவில் புதிதாக இரு குளங்கள் அமைத்த சென்னை மாநகராட்சி..

4 days ago 3
சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க ரயில் நிலையம் அருகே மூன்றரை ஏக்கர் பரப்பளவில் இரண்டு குளங்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. 3 ஆயிரத்து 800 சதுர மீட்டர் மற்றும் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், சராசரியாக 3 மீட்டர் ஆழம் கொண்டதாக இந்தக் குளங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே, கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 4 குளங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து வீணாக கடலில் சென்று கலக்கும் சுமார் 1.5 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article