வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி: மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி

3 months ago 20

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,858.60 கோடி நிதியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் சமீபத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காகவும், தேசிய பேரிடர் மீட்பு நிதி முன்பணமாகவும் ரூ.5,858.60 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக ரூ.1,492 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.1,036 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூ.716 கோடியும், பீகாருக்கு ரூ.655.60 கோடியும், குஜராத்திற்கு ரூ.600 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.416.80 கோடியும், இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.189.20 கோடியும், கேரளாவுக்கு ரூ.145.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.50 கோடியும், திரிபுராவுக்கு ரூ.25 கோடியும், சிக்கிமுக்கு ரூ.23.60 கோடியும், மிசோராமுக்கு ரூ.21.60 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 21 மாநிலங்களுக்கு ரூ.14,958 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்டிஆர்எப் மூலம் 21 மாநிலங்களுக்கு ரூ.9,044.80 கோடியும், என்டிஆர்எப் மூலம் 15 மாநிலங்களுக்கு ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (எஸ்டிஎம்எப்) 11 மாநிலங்களுக்கு ரூ.1,385.45 கோடியும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி: மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி appeared first on Dinakaran.

Read Entire Article