வெள்ள பாதிப்பு குறித்து 2ஆவது நாளாக புதுச்சேரியில் மத்தியக்குழு ஆய்வு..

1 month ago 7
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் 2ஆவது நாளாக மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களில் ஒரு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதாகவும், இதற்கு நிரந்த தீர்வு காணவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மற்றோரு குழுவினர் கொடாத்தூர், செட்டிபட்டு, பி.எஸ்.பாளையம், ஆரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெண் ஒருவர், வெள்ளத்தில் தனது கால்நடைகள் இறந்தது பற்றி கண்ணீருடன் தெரிவித்தார்.
Read Entire Article