சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் நேற்று கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று நள்ளிரவில் சென்னையிலும் மழை கொட்ட ஆரம்பித்தது. இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரைக்குள் 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
The post வெளுக்க போகும் கனமழை..! வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.