ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரு டாக்டர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுரங்கப்பாதை கட்டுமானப் பணிக்காக அப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலை நடத்தியவர்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என்று அமித் ஷா எச்சரித்துள்ளார்.