திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் கார்த்திகா பிரதீப் (31). இவர் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர் உள்பட கேரளாவில் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக இவர் விளம்பரம் செய்தார்.
இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இவரது நிறுவனத்தில் முன்பணமாக கட்டினர். ஆனால் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் கார்த்திகா யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் கோழிக்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த கார்த்திகா பிரதீப்பை கொச்சி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
The post வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி கேரள இளம்பெண் கைது appeared first on Dinakaran.