வெளிநாட்டில் வேலை என 4 இளைஞர்களை ஏமாற்றி ₹1.60 லட்சம் மோசடி

3 hours ago 1

தஞ்சாவூர், நவ.15: தஞ்சாவூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகூறி 4 பேரிடம் தலா ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை தேடும் படித்த இளைஞர்கள் மற்றும் பொது மக்களை குறி வைத்து சில நபர்கள் பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு முறைகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார்கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன், சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் ஆகியோர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் ஒரு புகார் மனுவை கடந்த 13ம் தேதி கொடுத்தனர். அதில் தங்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.40 ஆயிரத்தை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பெற்றுக் கொண்டு தங்களை வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றி விட்டார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்றைய தினமே விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, காட்பாடி புது தெருவை சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் முருகானந்தம் (38) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ராஜ்கமல் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் முருகானந்தம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வெளிநாட்டில் வேலை என 4 இளைஞர்களை ஏமாற்றி ₹1.60 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article