ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகள் நபியா என்ற சிறுமி மனு அளித்தார். இது குறித்து நபியா கூறும்போது, குடும்ப வறுமையின் காரணமாக ஏ.புனவாசலை சேர்ந்த சேர்ந்த எனது தாயார் பத்திரகாளி, சாயல்குடி அருகே உள்ள கொக்காடியை சேர்ந்த சப்.ஏஜென்ட் மற்றும் திருச்சி சேர்ந்த ஒரு ஏஜென்ட் மூலம் மஸ்கட் நாட்டில் அதிக சம்பளத்துடன் கம்பெனியில் வேலை என்று கூறி கடந்தாண்டு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கம்பெனி இல்லாமல் ஒரு வீட்டில் பனிப் பெண்ணாக சேர்த்து விட்டனர்.இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக எனது தாயாரை அந்த குடும்பத்தார் கொத்தடிமையாக நடத்தி வருகின்றனர். வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்துவதாகவும், எனது தாயார் வாட்ஸ் அப் மூலம் வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார். எனவே கலெக்டர், மாநில, ஒன்றிய அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து எனது தாய் பத்திரகாளியை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
The post வெளிநாட்டில் கொத்தடிமையான தாயை மீட்க மகள் கோரிக்கை appeared first on Dinakaran.