வெளிநடப்புக்காக ஆளுநர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ராமதாஸ்

4 months ago 15

சென்னை: ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்காக அவர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது; ஆளுநர் உரையிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஆளுநர் இல்லாமலேயே ஆளுநர் உரை படிக்கப்பட்டிருக்கிறது. உரையை படிப்பதற்காக வந்த ஆளுநர், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி, உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது. சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

Read Entire Article