சென்னை: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான தைப்பூச வாழ்த்துக்கள்! முருகப்பெருமானின் தெய்வீக அருளானது வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும்.
இந்தப் புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நல்லெண்ணங்களையும் கொண்டு வரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!”. இவ்வாறு பதிவில் கூறப்பட்டிருந்தது.
The post வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.