வெற்றி மாறனின் "பேட் கேர்ள்" முதல் பாடல் வெளியீடு

2 days ago 1

சென்னை,

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கோவாவில் நடைபெற்ற 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Anurag Kashyap and Vetri Maaran Present #BadGirl "Please Yenna Appadi Paakadhey" song out now.▶️ https://t.co/J668bn2siBMusic - Amit TrivediSinger - Maalavika ManojLyricist - Kaber Vasuki@grassrootfilmco #VetriMaaran @anuragkashyap72 @varshabharath03 @ItsAmitTrivedi pic.twitter.com/0LB2cK4e70

— Grass Root Film Co (@GrassRootFilmCo) March 28, 2025
Read Entire Article